News April 8, 2025
ரூ.2.50 லட்சம் திருமண உதவித்தொகை

சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களுக்கு அம்பேத்கர் கலப்பு திருமண உதவித் திட்டத்தின் கீழ் ரூ.2.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற, தம்பதியில் ஒருவர் SC/ST வகுப்பைச் சேர்ந்தவராகவும், மற்றொருவர் BC/MBC வகுப்பைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். தம்பதிகளின் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். <
Similar News
News December 4, 2025
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள 5412 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியுள்ளது. இந்த பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களைச் சுற்றி தேங்கியுள்ள அதிகப்படியான நீரினை வடிகால் அமைத்து உடனடியாக வடித்து விட வேண்டும். மேலும் மழைக்காலங்களில் உரம் இடுதல், பூச்சி மருந்து தெளித்தல், களைக்கொல்லி இடுதல் போன்றவற்றைத் தவிர்த்திட வேண்டும் என ஆட்சியர் தெரிவித்தார்.
News December 4, 2025
திருவள்ளூர்: மின்சாரம் தாக்கி கொடூர பலி!

கும்மிடிப்பூண்டி அடுத்த சிறுபுழல்பேட்டையை சேர்ந்தவர் ஆதிமூலம்(49). இவர் சிறுபுழல்பேட்டை ஊராட்சியில் எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில், அப்பகுதியில் டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டது. அதனைப் பழுதுபார்க்க சென்ற ஆதி மூலம் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 4, 2025
திருவள்ளூர்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <


