News February 16, 2025

ரூ.2.23 லட்சத்திற்கு புத்தகம் விற்பனை: கலெக்டர் தகவல்

image

கள்ளக்குறிச்சி-தியாகதுருகம் சாலை வி.எம் திடலில் 3வது கல்லை புத்தகத் திருவிழா நேற்று முன்தினம் பிப்ரவரி 14-ம் தேதி துவங்கியது. பல்வேறு பதிப்பகங்களின் புத்தகங்கள் சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. முதல் நாள் விழாவில், மொத்தம் 20,075 பேர் கண்டுகளித்தனர். 2 லட்சத்து 23 ஆயிரத்து 594 ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையானது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 15, 2025

கள்ளக்குறிச்சி: ரோந்து பணி விவரங்கள்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (நவ.14) இரவு முதல் இன்று (நவ.15) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News November 14, 2025

கள்ளக்குறிச்சி ஆட்சியரின் அறிவிப்பு!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு நிலையில்லா மிதிவண்டிகள் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 81 பள்ளிகளில் 13 ஆயிரத்து 263 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படும். என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

News November 14, 2025

கள்ளக்குறிச்சி: இத கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!

image

கள்ளக்குறிச்சி மக்களே வருமானம், சாதி, குடிமை, குடியிருப்பு&மதிப்பீடு சான்றிதழ் வாங்க, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார் &அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் கள்ளக்குறிச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04151-294600) புகாரளிக்கலாம். இந்த முக்கிய தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்

error: Content is protected !!