News March 28, 2025
ரூ. 2 1/2 லட்சம் மதிப்பில் 25 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஆதி திராவிடர் பழங்குடியினர் நல மாநில ஆணைய தலைவர் தமிழ்வாணன் தலைமையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 25 பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை சுமார் ரூ. 2.50 லட்சம் மதிப்பில் ஆணையர் வழங்கினார். முன்னதாக வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவின் கீழ் பெறப்பட்ட புகார் மனுக்களின் நிலவரம் குறித்து அனைத்து துறை அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார்.
Similar News
News November 16, 2025
மயிலாடுதுறையில் 163 பேர் ஆப்சென்ட்!

தமிழக முழுவதும் இன்று ஆசிரியர் தகுதி தேர்வு (தாள் – 1) நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நான்கு தேர்வு மையங்களில் இன்று தேர்வு நடந்தது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 1295 தேர்வர்கள் தேர்வு எழுத ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 1132 பேர் தேர்வு எழுதி உள்ளனர். 163 பேர் இன்று தேர்வு எழுத வரவில்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
News November 16, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களில் உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் இரவு முதல், (நவ.15) காலை 8 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 15, 2025
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலெர்ட்!

வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள காரணத்தால், தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் நாளை (நவ.16) மயிலாடுதுறை, கடலூர், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!


