News August 24, 2024

ரூ.2 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு – எஸ்பி

image

சீமான், சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியின் மூன்று பொறுப்பாளர்கள் மீது, 2 கோடி ரூபாய் கேட்டு மான நஷ்ட வழக்கு தொடர உள்ளேன் என திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார், தனது எக்ஸ் வலைத்தள பதிவிட்டுள்ளார். மேலும், இணையத்தில் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வது குறித்த புகார்களை இணையதளத்தில் பதிவிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News

News October 22, 2025

திருச்சி: திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (அக்.23) நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மணிகண்டம் ஒன்றியம் கோனார் சத்திரம், திருவெறும்பூர் ஒன்றியம் வாழவந்தான் கோட்டை, புள்ளம்பாடி ஒன்றியம் ஆலம்பாக்கம், தொட்டியம் ஒன்றியம் காடுவெட்டி, உப்பிலியபுரம் ஒன்றியம் கோட்டப்பாளையம் ஆகிய பகுதிகளில் முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News October 22, 2025

திருச்சி: இந்திய அஞ்சல் துறையில் வேலை

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், IPPB வங்கியில் 348 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. கடைசி தேதி : 29.10.2025
4. சம்பளம்: ரூ.30,000
5. வயது வரம்பு: 20 – 35 (SC/ST – 40, OBC – 38)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>>
7. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க

News October 22, 2025

திருச்சி மாவட்டத்தில் 975.5 மி.மீ பதிவு

image

திருச்சி மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் தொடர்ச்சியாக கனமழையும் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்தது அதேநேரம், திருச்சி பொன்னணிஆறு அணை பகுதியில் அதிகபட்சமாக 129.4 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்துள்ளது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 975.5 மி.மீ மழையும், சராசரியாக 40.65 மி.மீ மழையும் பதிவாகி உள்ளது.

error: Content is protected !!