News March 24, 2025
ரூ.1770 கட்டணத்தில் நீச்சல் பயிற்சி

நாகை மாவட்ட விளையாட்டு அரங்க நீச்சல் குளத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், பொதுமக்கள் ஆகியோருக்கு தகுந்த பாதுகாப்பு வசதியுடன் 5 கட்டங்களாக நீச்சல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி கட்டணமாக ஜி.எஸ்.டி உட்பட ரூ.1770 மட்டுமே பெறப்படுகிறது. எனவே இந்த வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்
Similar News
News November 6, 2025
நாகை: வாய்க்காலில் சடலமாக மிதந்த நபர்

கீழ்வேளூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட திமிங்கல புலியூர் பகுதியை சேர்ந்தவர் யாக்கோபு(65). கொத்தனாரான இவர் வயலுக்கு சென்று வருவதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறி சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், திமிங்கல தெற்கு வெளி சங்கமங்கலம் பாசன வாய்க்காலில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 6, 2025
நாகை: மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

நாகை மாவட்டம் திருக்கண்ணபுரம் மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் அருண்குமார்(26). இவர் இன்று காலை புதிதாக கட்டி வரும் வீட்டிற்கு மோட்டார் மூலம் தண்ணீர் பிடிப்பதற்கு மோட்டார் சுவிட்ச் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்கசிவு ஏற்பட்டு அருண்குமாரை மின்சாரம் தாக்கி உள்ளது. இதில் அருண்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருக்கண்ணபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 6, 2025
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் நேற்று (நவ.5) இரவு 10 மணி முதல் இன்று (நவ.6) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.!


