News October 24, 2024
ரூ.16 லட்சத்து 26 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

திருத்தணி பகுதியை சேர்ந்தவர் ராஜலட்சுமி (49) கடந்த 2020-ம் ஆண்டு விபத்தில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து ராஜலட்சுமியின் கணவர் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு விசாரணை நீதிபதி லிங்கேஸ்வரன் முன்னிலையில் நடந்தது. அப்போது இருசக்கர வாகன உரிமையாளரும் இன்சூரன்ஸ் நிறுவனமும் இணைந்து மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.16 லட்சத்து 26 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார்.
Similar News
News November 1, 2025
திருவள்ளூர் இன்றைய ரோந்து காவலர்களின் விவரம்

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (31.10.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.
News October 31, 2025
கும்மிடிப்பூண்டியை சேர்ந்த பெண்களின் சடலம் எண்ணூரில் மீட்பு

கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சார்ந்த தேவகி(30), தேர் வழியை சேர்ந்த காயத்ரி(18), தேவம்பேட்டை சேர்ந்த பவானி (19), எளாவூரை சேர்ந்த ஷாலினி(18) இன்று மின்சார ரயில் சென்னைக்கு சென்றனர். இந்நிலையில் 4 பேரின் சடலம் சென்னை எண்ணூர் கடற்கரை ஓரத்தில் மீட்கப்பட்டுள்ளது. 4 பேரும் எதனால் இறந்தார் என இதுவரை தெரியாத நிலையில் இந்த சம்பவம் கும்மிடிப்பூண்டியில் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News October 31, 2025
திருவள்ளூர்: Driving Licence வைத்திருப்போர் கவனத்திற்கு..

திருவள்ளூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <


