News March 25, 2025
ரூ 10 லட்சம் பரிசு: நாமக்கல் மாவட்ட நிர்வாகம் தகவல்

மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள், 3 வணிக நிறுவனங்களுக்கு முதல் பரிசாக ரூ.10 லட்சம், 2ஆம் பரிசாக ரூ.5 லட்சம், 3ஆம் பரிசாக ரூ.3 லட்சம் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. கூடுதல் விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட அலுவலத்தில் தகவல் பெற்று விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.
Similar News
News December 23, 2025
நாமக்கல்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1. மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
4. முதியோருக்கான அவசர உதவி -1253
5. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
6. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இதனை ஷேர் பண்ணுங்க!
News December 23, 2025
இன்றைய கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (23-12-2025) காலை நிலவரப்படி, கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை (உயிருடன்) ரூ.120-க்கும், முட்டை கோழி ரூ.95-க்கும் விற்பனையாகி வருகின்றது. அதேபோல் முட்டை கொள்முதல் விலை ரூ. 6.40- ஆக விற்பனையாகி வருகின்றது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையையொட்டி கேக் தயாரிப்பதற்கு முட்டையின் தேவை அதிகரித்துள்ளதால், விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
News December 23, 2025
நாமக்கல்: ஆண் குழந்தை வைத்திருப்போர் கவனத்திற்கு!

நாமக்கல் மக்களே..,’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT


