News April 22, 2025
ராயபுரத்தில் ரயில் தடம் புரண்டது

சென்னை ராயபுரம் அருகே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவடியில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயிலின் 3ஆவது பெட்டியின் சக்கரங்கள் தடம் புரண்டது. நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ரயில் பாதையில் இருந்து இறங்கிய ரயில் பெட்டியை மீண்டும் ரயில் பாதையில் ஏற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
Similar News
News July 9, 2025
பெயிலானாலும் வேலை நிச்சயம்; TN அரசின் சூப்பர் திட்டம்

வேலையில்லாதவர்கள் & படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் வேலைவாய்ப்பை பெற வெற்றி நிச்சயம் திட்டத்தை TN அரசு தொடங்கியுள்ளது. இதில் தங்கும் வசதி, உணவு&ரூ.12,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். தொலை தொடர்பு, IT, சுகாதாரம் போன்ற 165 பாடப்பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News July 9, 2025
வெற்றி நிச்சயம் திட்டத்திற்கு தேவையான தகுதிகள்

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோர் தமிழ்நாட்டை சேர்ந்த 18 -35 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும், வேலை தேடுபவராகவும் படிப்பை பாதியில் நிறுத்தியவராகவும் இருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு, சாதி சான்றிதழ், வங்கி கணக்கு, வோட்டர் ஐடி, வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், மின்னஞ்சல் ஐடி& மொபைல் எண் ஆகியவை கட்டாயம் தேவைப்படுகின்றன. நண்பர்கள், உறவினர்களுக்கு பகிரவும்
News July 9, 2025
சென்னையில் சிலை அமைப்பை ஒழுங்குபடுத்த திட்டம்

சென்னை, சாலைகள், நடைபாதைகள் மறையும் வகையில் சிலைகள் அமைக்கப்படுவது தொடர்பாக வரும் புகார்களின் பின்னணியில், சென்னை நகரில் பொதுஇடங்களில் சிலை அமைப்பை ஒழுங்குபடுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 2019ல் வருவாய் துறை வெளியிட்ட வழிகாட்டிகளை பின்பற்றி புதிய விதிமுறைகள் வரவிருக்கின்றன. அதிகாரிகள் இது தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.*சென்னை சாலைகளில் சிலை நிறுவப்பட்டுள்ளது பற்றி உங்கள் கருத்து?