News April 6, 2025

ராம நவமியில் தரிசிக்க வேண்டிய கோதண்டராமர் கோயில்

image

சிதம்பரம் மேலரத வீதியில் பேருந்து நிறுத்தம் அருகே நூற்றாண்டு கண்ட மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ கோதண்டராமர் கோயில் உள்ளது. இக்கோயில் திருச்சித்ரக்கூடம் என்று அழைக்கப்படுகிறது. ஸ்ரீராம நவமியை முன்னிட்டு ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் விழா 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். இன்று ராமநவமி என்பதால் குடும்பத்தினருடன் இக்கோயிலுக்கு சென்று வாருங்கள். உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணிங்க.. 

Similar News

News December 19, 2025

கடலூர் மாவட்டத்தில் நாளை கரண்ட் இருக்காது!

image

கடலூர் மாவட்டத்தில் நாளை (டிச.20) பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக கடலூர் டவுன், செம்மண்டலம், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, பெண்ணாடம், குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை, செம்மங்குப்பம், குள்ளஞ்சாவடி, தோப்புக்கொல்லை, கோரணப்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

News December 19, 2025

கடலூர் மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை

image

ஒரு சர்க்கரை ஆலையின் எல்லைக்குட்பட்ட கரும்புகளை மற்ற சர்க்கரை ஆலைகளின் அரவைக்கு எடுத்துச் செல்வது கரும்பு கட்டுப்பாடு சட்டப்படி சட்ட விரோத செயலாகும். எனவே சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே கூட்டுறவு சர்க்கரை ஆலை எல்லைக்குட்பட்ட புவனகிரி, சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம் பகுதி விவசாயிகள் தங்களது கரும்புகளை வேறு சர்க்கரை ஆலைகளுக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News December 19, 2025

கடலூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

image

முன்னாள் படைவீரர்களுக்கு நடப்பாண்டில் “முதல்வரின் காக்கும் கரங்கள்“ திட்டத்தின் கீழ் 7 பயனாளிகளுக்கு ரூ.35,07,611 மானியத்துடன் கூடிய, ரூ.1,38,39,000 வங்கி கடனுதவி தொழில் தொடங்க ஏதுவாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளி முன்னாள் படைவீரர்களுக்கு பிரத்யோக ஸ்கூட்டர் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!