News June 28, 2024
ராம்நாட்டில் நேரடி கொள்முதல் நிலையம்: அறிவிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் அர.சக்கரபாணி சட்டமன்றத்தில் நேற்று அறிவித்தார். கொள்முதல் நிலையங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவித்தார். மற்றொரு அறிவிப்பில், ராம்நாட்டில் புதிய வட்ட செயல்முறை கிடங்கு வளாகங்கள் கட்டப்படும் என்றார்.
Similar News
News November 21, 2025
ராமேஸ்வரம் மாணவி கொலை: சாட்சியை காக்க கோரிக்கை

ராமேஸ்வரத்தில் பள்ளிக்கு சென்ற பிளஸ் 2 மாணவி ஷாலினியை ஒரு தலையாக காதலித்த போதை இளைஞர் முனியராஜ் 21, கத்தியால் குத்திக்கொலை செய்தார். ஷாலினியுடன் மற்றொரு பிளஸ் 2 மாணவியும் உடன் சென்றுள்ளார்.அவரை போலீசார் இவ்வழக்கில் முக்கிய சாட்சியாக சேர்த்துள்ளனர்.அந்த மாணவிக்கு போலீசார் உரிய பாதுகாப்பு அளித்து விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
News November 21, 2025
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (நவ.21) கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகபட்டினம், இராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதுபற்றி தெரியாதவர்களக்கு SHARE செய்து உதவுங்க.
News November 21, 2025
ஆட்சியரிடம் வாழ்த்து பெற்ற முதுகுளத்தூர் மாணவி

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள தெற்கு காக்கூர் கிராமத்தை சேர்ந்த ஜோதி மலர் என்ற மாணவி தாய்லாந்தில் நடைபெற்ற மிஸ் ஹெரிடேஜ் இண்டர்நேஷனல் 2025 போட்டியில் கலாச்சார தூதர் பட்டம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார். இதையடுத்து மாணவி ஜோதி மலர் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.


