News March 19, 2024
ராம்நாடு: விளம்பரங்கள் அழிக்கும் பணி தீவிரம்

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. அதன்படி, ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சாலையோரங்களில் வைக்கப்பட்டிருக்கும் அரசியல் சம்பந்தமான விளம்பரங்கள் மற்றும் பேனர்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். வருவாய்த்துறையினர், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பரக்கத்துல்லா தலைமையில் சுவர் விளம்பரங்கள் பேனர்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.
Similar News
News November 19, 2025
பரமக்குடி: கஞ்சா போதையில் வெட்டி கொலை; ஒருவர் கைது

பரமக்குடி மஞ்சள்பட்டினம் வைகை ஆற்றுப் பகுதியில்(நவ.17) வேலு, லட்சுமணன் ஆகிய இருவர் மீது மர்ம நபர்கள் அரிவாளால் தாக்குதல் நடத்தியதில் வேலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்; லட்சுமணன் கடுமையாக காயமடைந்தார். எமனேசுவரம் போலீஸார் விசாரணையில் என்.வளையனேந்தல் கிராமத்தை சேர்ந்த அலெக்ஸ்பாண்டி(26) என்பவர் கைது செய்யப்பட்டார். கஞ்சா போதையில் தோப்பில் நடமாடியதை முதியவர் கண்டித்ததால் கொலை செய்ததாக தகவல்.
News November 19, 2025
இராமநாதபுரத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

இராமநாதபுரம் மாவட்ட பழைய ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருகிற நவ.21 காலை 10:30 மணியளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அனைத்துதுறை அரசு அதிகாரிகள் பங்கேற்க இருக்கின்றனர். எனவே விவசாயிகளும் விவசாய சங்க பிரதிநிதிகளும் பங்கேற்று கோரிக்கைகள், குறைகளை தெரிவித்து பயன் பெறலாம் என இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
News November 18, 2025
பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய மெகா சைஸ் மீன்

பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட நாட்டு படகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றிருந்தனர். இந்நிலையில் பாம்பன் அந்தோனியார் புரத்தை சேர்ந்த கிளிண்டன் என்பவருக்கு சொந்தமான நாட்டு படகில் 3 மீட்டர் நீளம் கொண்ட 115 கிலோகிராம் எடை கொண்ட மஞ்சள் வால் கேரை மீன் என்று அழைக்கப்படும் அம்பர்ஜாக் மீன் பிடிபட்டது. இந்த மீன் இன்று (நவ.18) 17 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.


