News September 13, 2024
ராம்நாடு: போலீசார் மீதான விசாரணை ஒத்திவைப்பு

மதுரை வெங்கடேசன் என்பவர் திருட்டு வழக்கு தொடர்பாக 2012ல் எமனேஸ்வரம் காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டார். அங்கு வைத்து போலீசார் தாக்கியதில் உயிரிழந்ததாக கூறி வழக்குப் பதிவு செய்தனர். இதில் போலீசார் கிருஷ்ணவேல், ஞானசேகரன், கோதண்டராமன் ஆகிய 3 பேரும் நேற்று மாவட்ட கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகினர். சாட்சிகள் விசாரணைக்கு பின் நீதிபதி (பொறுப்பு)) உத்தமராஜா வழக்கை வரும் 30-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Similar News
News November 23, 2025
தொண்டி: தந்தை,மகன் விளையாட்டால் ஏற்பட்ட விபரீதம்

தொண்டி அருகே டீ கடையில் அமர்ந்திருந்தவர் மீது திடீரென அவரது வலது பக்க தோலில் தோட்ட பாய்ந்தது. போலீசார் அந்த கடையின் எதிரில் உள்ள டூவீலர் பழுது பார்க்கும் கடையை ஆய்வு செய்ததில் கடையின் உரிமையாளருக்கு சொந்தமான ஏர் கன் துப்பாக்கியை வைத்து இருவரும் சுடுவது போல விளையாடியுள்ளனர். அப்போது, சேவியர் உடலில் தோட்டா பாய்ந்துள்ளது’ கடை கிருஷ்ணமூர்த்தி, 45, அவரது மகன் காளீஸ்வரன், 22 போலீசார் கைது செய்தனர்.
News November 23, 2025
ராமநாதபுரம்: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

ராமநாதபுரம் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு <
News November 23, 2025
இராம்நாடு: இலவச வீடு பெற விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர்

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் குதக்கோட்டை ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவ படத்தில் 100 வீடுகள் வழங்க 100 பயனாளிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர். எனவே தகுதியானவர்கள், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் மற்றும் குதக்கோட்டை ஊராட்சியில் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம் என இராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.


