News March 29, 2024
ராம்நாடு: தேர்தல் விதிமுறைகளை மீறிய திமுக

திருவாடானை தாலுகா காரங்காடு மற்றும் நம்புதாளையில் இன்று திருவாடனை சட்டமன்ற தொகுதியில் தாசில்தார் ஸ்ரீதர் மாணிக்கம் தலைமையிலான சப் -இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் பறக்கும் படையினர் தேர்தல் நடத்தை விதி மீறல் தொடர்பாக சோதனை நடத்தியுள்ளனர். அப்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி ஊனப்பட்டிருந்த தி.மு.க. கொடிக்கம்பங்களை அதிரடியாக அகற்றினர்.
Similar News
News December 19, 2025
இராம்நாடு: 2026 தேர்தலில் போட்டியிட Ex.MLA. விருப்ப மனு

அதிமுக சார்பில் சென்னை தலைமை அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பரமக்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளருக்கான விருப்ப மனுவை பரமக்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பேரையூர் சதன் பிரபாகரன் வழங்கினார். உடன் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் M.A முனியசாமி இருந்தார்.
News December 19, 2025
BREAKING ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,17, 364 வாக்காளர்கள் நீக்கம்

ராமநாதபுரம் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங்காலோன் இன்று வெளியிட்டார். இதன் படி பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் என 4 சட்டமன்றத் தொகுதிகளில் 10,91,326 வாக்காளர்கள் உள்ளனர். 4 சட்டமன்ற தொகுதிகளில் 1,17,364 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
News December 19, 2025
ராமநாதபுரம் கலெக்டர் அறிவிப்பு

மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ராமநாதபுரம் நேஷனல் அகாடமி மெட்ரிக்., பள்ளி வளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் டிச.24 ( புதன் கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.


