News September 14, 2024
ராம்நாடு டிஎன்பிஎஸ்சி தேர்வு : 3,752 பேர் ஆப்சென்ட்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 47 மையங்களில் 56 அறைகளில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ முதல்நிலைத் தேர்வு இன்று(செப்.14) நடந்தது. இந்த தேர்விற்கு விண்ணப்பித்த 15,657 பேரில் 11,905 பேர் மட்டும் பங்கேற்றனர். கண்காணிப்பு அலுவலர்கள் 2 பேர் தலைமையில் 55 தேர்வு மைய பார்வையாளர்கள் பணியில் ஈடுபட்டனர். 13 நடமாடும் கண்காணிப்பு குழு, 2 பறக்கும் படை குழு தேர்வு மையங்களை கண்காணித்தனர்.
Similar News
News November 13, 2025
ராம்நாடு: சாலை விபத்தில் இளைஞர் பலி

மண்டபம் பகுதியை சேர்ந்த சண்முகசாமி என்பவரது மகன் சரவணகுமார் (39). இவர், நேற்று மாலை தங்கச்சிமடம் வலசையில் இருந்து மண்டபம் திரும்பினார். அப்போது எதிரே வந்த ஹேமந்த்ராஜ் என்பவரது இருசக்கர வாகனம் மோதி விபத்தில் சிக்கிய சரவணகுமார் உயிரிழந்தார். இச் சம்பவம் குறித்து தங்கச்சிமடம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News November 13, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (நவ.12) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
News November 12, 2025
BREAKING இராமநாதபுரத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (நவ.12) கனமழைக்கான மஞ்சள் அலட்ர் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


