News June 26, 2024
ராம்நாடு கலெக்டரிடம் செவிலியர் மனு

தமிழகம் முழுவதும் உள்ள துணை சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத் துறை கிராம/பகுதி/சமுதாய செவிலியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் நிர்மலா, கோமதி, தமிழ்ச்செல்வி, ராஜலட்சுமி உள்ளிட்டோர் கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் நேற்று (ஜூன் 25) மனு அளித்தனர்.
Similar News
News November 8, 2025
ராம்நாடு: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வழி

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News November 8, 2025
பரமக்குடி வாக்காளர் கவனத்திற்கு… கோட்டாட்சியர் அறிவிப்பு

பரமக்குடி(தனி) சட்டமன்றத் தொகுதியில் SIR கணக்கெடுப்புப் பணி நவ 4- டிச. 4 வரை நடைபெறுகிறது. வாக்காளர்கள் https://voters.ecl.gov.in & crolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx வலைதளங்களில் வாக்காளர் சுய விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். SIR தொடர்பான சந்தேகங்கள், கூடுதல் விவரங்களுக்கு தொகுதி கட்டுப்பாட்டு அறையை 04564 224151ல் தொடர்பு கொள்ளலாம் என பரமக்குடி கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.
News November 8, 2025
ராம்நாடு: நிலம் வாங்க அரசு வழங்கும் ரூ.5 லட்சம்

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் (அ) அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையத்தில் பார்க்கலாம் (அ) ராம்நாடு மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க


