News March 14, 2025

ராமேஸ்வரம் – ஹூப்ளி வாராந்திர ரயில் நீடிப்பு

image

ராமேஸ்வரம் – ஹூப்ளி இடையேயான வாராந்திர ரயில் சேவை நீடிப்பு செய்து ஏப்ரல் 12,19,26 ஆகிய நாட்களில் ஹூப்ளியில் இருந்து காலை 6:50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6:10 மணிக்கு ராமேஸ்வரம் வந்துவிடும். மறுமார்க்கமாக ஏப்ரல் 12, 20, 27 ஆகிய தேதிகளில் ராமேஸ்வரத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 7:40 மணிக்கு ஹூப்ளி செல்லும் என தென்னக ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர்

Similar News

News March 15, 2025

இந்தியாவின் பழமையான பள்ளிவாசல்

image

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அமைந்துள்ள பழைய ஜும்மா பள்ளிவாசல் இந்தியாவின் மிகவும் பழமையான பள்ளிவாசலாக கருதப்படுகிறது. கி.பி 628ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் பள்ளிவாசல் 1000 ஆண்டிற்கும் மேலாக இஸ்லாமிய கலாச்சாரத்தை பறைசாற்றி இருக்கிறது. திராவிட இஸ்லாமிய மற்றும் தமிழ் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது இந்த பள்ளிவாசல். இந்தப் பள்ளிவாசல் 11ஆம் நூற்றாண்டில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.

News March 15, 2025

TN BUDGET – ராமநாதபுரத்திற்கான அறிவிப்பு

image

▶️ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.11.74 கோடியில் சீமைகருவேல மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடி செய்ய ஊக்கு விக்கப்படும்.
▶️ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நீர்வடி மேம்ப்பாட்டு திட்டத்திற்காக ரூ.286.79 கோடி ஒதுக்கீடு.
▶️ரூ.68 கோடியில் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள்ல் நீர்வழிப்பகுதிகளை தூர்வார, தோட்டக்கலை பயிர்கள், பண்ணைக்காடுகள் அமைக்கப்படும்.

News March 15, 2025

ராமநாதபுரத்தில் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

image

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இணை இயக்குநர் நலப்பணிகள் அலுவலகம், மாவட்ட பார்வை தடுப்பு சங்கத்தில் காலியாக உள்ள பணியியங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பங்கங்களை ramanathapuram.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட சுகாதார அலுவலத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்பிக்கலாம். SHARE IT

error: Content is protected !!