News November 10, 2024

ராமேஸ்வரம் மீனவர் 23 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை!

image

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நேற்று காலை தொழிலுக்கு சென்றன. அப்போது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 23 மீனவர் 3 விசைப் படகுகளுடன் இலங்கை கடற்படையினர் நெடுந்தீவு அருகே இன்று(நவ.,10) காலை சிறைபிடித்துச் சென்றனர். அடிக்கடி சிறை பிடிக்கப்படும் இச்சம்பவத்தால் ராமேஸ்வரம் மீனவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

Similar News

News December 10, 2025

ராமநாதபுரம்: லஞ்சம் வாங்கிய VAO கைது!

image

பரமக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒருவர் தனது பட்டா மாறுதலுக்காக வேந்தோனி கிராம VAO கருப்பசாமியை சந்தித்து பேசியுள்ளார். கருப்பசாமி தனக்கு ஆவனம் கிடைக்கவில்லை எனவும், தான் பரிந்துரை செய்வதற்காக ரூ.13,000 கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து, அந்த நபர் மாவட்ட ஊழல் தடுப்பு போலீஸாரிடம் புகார் அளித்தார். இந்நிலையில் நேற்று ரசாயனம் தடவிய பணத்தை கருப்பசாமியிடம் கொடுக்கவே, அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.

News December 10, 2025

ராம்நாடு: வரிசையில் நிற்க தேவையில்லை.. இனி ONLINE

image

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மக்களே இனி நீங்க வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி, பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவு போன்ற பல்வேறு அரசு சேவைக்காக அலுவலகத்துக்கு சென்று நீண்ட நேரம் வரிசையில் நின்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இனி இங்கு <>க்ளிக்<<>> செய்து வீட்டில் இருந்தபடியே உங்கள் வரிகளை செலுத்த முடியம், குறைகளை புகார் செய்யவும் முடியும்.. மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த உடனே SHARE பண்ணுங்க

News December 10, 2025

ராமநாதபுரம்: டூவீலர் மோதி பரிதாப பலி!

image

திருவாடனை அருகே கோவனி கிராமத்தை சேர்ந்த ஆரோக்கியசாமி (50) நேற்று பொருட்கள் வாங்க கடைக்கு திருச்சி – ராமேஸ்வர சாலையில் நடந்து சென்றார். அப்போது பின்னாடி டூவீலரில் வந்த ஒருவர் ஆரோக்கியசாமி மீது மோதினார். அவரை மீட்டு தேவகோட்டை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த திருவாடனை போலீசார் விபத்து ஏற்படுத்திய முருகேசனை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!