News August 2, 2024

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

image

ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று மீன் பிடிக்க சென்ற நிலையில், நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் மீனவர்களின் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் ஒரு மீனவர் உயிரிழந்த நிலையில், சிலர் மீட்கப்பட்டனர். இந்நிலையில், மீனவர்களை கைது செய்து தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையை கண்டித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக தெரிவித்துள்ளனர்.

Similar News

News November 2, 2025

இராமநாதபுரத்தில் இலவச வீடு வேண்டுமா?

image

திருப்­புல்­லாணி ஊராட்சி, குதக்­கோட்­டை­யில் 2023 – 2024 ஆண்டு ஒதுக்­கீட்­டில் பெரியார் நினை­வு ச­மத்து­வபுரம் கட்­டப்­பட்­டு­ வ­ருகிறது. 100 வீடுகளுக்கு பயனாளிகள், தேர்ந்­தெ­டுக்­கப்ப­ட­ உள்­ள­னர். (நவ.5) மாலை 5 மணிக்குள் ஊராட்சி ஒன்­றிய அலு­வ­லகத்தில் வட்­டா­ர­வ­ளர்ச்­சி அலு­வ­லரி­டம் நேரி­லோ அல்­ல­து அஞ்­சல் மூல­மாக விண்­ணப்­பிக்­க­லாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவித்துள்ளார்.

News November 2, 2025

ராம்நாடு: கபாடி வீரர்கள் கவனத்திற்கு

image

தமிழ்நாடு அமெச்சூர் கபாடி அசோசியேஷன் நடத்தும் மாவட்ட ஜூனியர் சாம்பியன்ஷிப் கபாடி போட்டி தினையத்தூரில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7.11.2025 முதல் 9.11.2025 வரை நடைபெறுகிறது. இதற்காக ராம்நாடு ஜூனியர் கபாடி வீரர்கள் தேர்வு ஞாயிற்றுக்கிழமை திருவாடானை வட்டம், தினையத்தூர், TNR விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. 18.01.2006 க்குள் பிறந்தவர்கள், 75 கிலோ எடை, ஆதார் ஜெராக்ஸ் கொண்டு வரவும். SHARE IT.

News November 2, 2025

இராமநாதபுரம் மாவட்டத்தில் 38% மழை பதிவு

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த அக்டோபர்.01 முதல் 31-ஆம் தேதி வரை இயல்பை மாவட்டத்தில் விட 38% மழை அதிக மழை பதிவாகியுள்ளது. இந்த மழை இராமநாதபுரம் மாவட்டத்தில் இயல்பாக 189.09 மில்லி மீட்டர் மழை பாதிவாகவேண்டியது. ஆனால் கடந்த மாதம் இயல்பை விட 262.01 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. என தமிழ்நாடு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!