News April 5, 2025

ராமேஸ்வரத்திற்கு விரைந்த வேலூர் போலீசார்

image

ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில்வே பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி வருகிற 6-ம் தேதி வருகிறார். எனவே பிரதமர் வருகையொட்டி பாதுகாப்பு பணிக்காக வேலூரில் இருந்து 30 போலீசார் மற்றும் வேலூர் வெடி குண்டு தடுப்பு பிரிவு போலீசார் 5 பேர் என மொத்தம் 35 பேர் 2 குழுக்களாக ராமேஸ்வரம் புறப்பட்டு சென்றனர். அவர்கள் அங்கு 3 நாள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என எஸ்பி மதிவாணன் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 5, 2025

வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு

image

வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் (CMC) பல்வேறு பதவிகளுக்கு 10 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிகளுக்கு ரூ.30,643 வரை சம்பளம் கிடைக்கும். இதற்கு, 10th, Any Degree, B.Sc, BVSc, D.Pharm, M.Sc, MA, MD, MS, MSW, PG Diploma போன்ற படிப்புகளை படித்தவர்கள் https://www.cmch-vellore.edu/about-us/ என்ற தளத்தில் ஏப்ரல் 7-க்குள் விண்ணப்பிக்கலாம். *செம்ம வாய்ப்பு, நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்க

News April 5, 2025

வேலூர் மக்களுக்கு மின்சார அதிகாரிகள் எச்சரிக்கை

image

வேலூா் காகிதப்பட்டறை, சேண்பாக்கம் பகுதியில் மின் கம்பங்களில் கட்டப்பட்டிருந்த பசுமாடுகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தன. இதையடுத்து, ‘மின் கம்பங்களில் கால்நடைகளை கட்டி வைக்க வேண்டாம். மின் கம்பிகள் அறுந்து கிடந்தால் மின்வாரிய அலுவலகத்துக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்’ என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். *இது போன்ற முக்கிய அறிவுரைகளை கண்டிப்பாக பின்பற்றுங்கள். நண்பர்களையும் உஷார் படுத்துங்கள்*

News April 5, 2025

வேலூர் மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

image

வேலூர் மாநகராட்சி முதலாவது மண்டலத்தில் நடைபெற்று வரும் குடிநீர், சாலை, கழிவுநீர் கால்வாய், புதை சாக்கடை திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் முதலாவது மண்டல அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது ஆட்சியர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் புதை சாக்கடை, சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளாா்.

error: Content is protected !!