News May 13, 2024
ராமானுஜரின் 1007வது அவதாரத் திருநாள்

புதுவை
செயின்ட் தெரஸ் வீதியில் உள்ள அரங்க ராமானுஜர் பஜனை மடம் ஸ்ரீதேவி பூதேவி சமேத அனந்தரங்க நாதர் சன்னதியில் ராமானுஜரின் 1007வது அவதார திருநாள் நேற்று கொண்டாடப்பட்டது. ராமானுஜருக்கு சிறப்பு திருமஞ்சனம் கோலாகலமாக நடந்தது.
ராமானுஜரின் உருவச்சிலை உள்புறப்பாடு செய்யப்பட்டு காலை 11 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.
Similar News
News April 21, 2025
புதுச்சேரி: அக்னி வீர் பணிக்கு சிறப்பு முகாம்

அக்னிவீர் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் பொதுப்பணி, தொழில் நுட்பப்பணி, எழுத்தர், பண்டக காப்பாளர், டிரேட்ஸ்மேன் உள்ளிட்ட பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிறப்பபட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க வருகிற 25ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில், புதுச்சேரி சேர்ந்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் 22.04.25 அன்று தாகூர் கலைக் கல்லூரியில் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
News April 21, 2025
பூசாரி கொலை – கொத்தனார் கைது!

புதுச்சேரி, தவளகுப்பத்தில் கோயில் பூசாரி சுந்தர் என்பவர் மீது தலையில் குழவி கல்லை போட்டு கொலை செய்ததாக, கொத்தனாரான தமிழரசனை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசாரின் விசாரணையில், முன்விரோதம் காரணமாக கொலை செய்ததாக தமிழரசன் வாக்குமூலம் அளித்துள்ளார் என கூறப்படுகிறது. அவரை கைது செய்த போலீசார் வழக்கு பதிந்து, வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்றும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News April 20, 2025
செல்வம் பெருக இவரை வணங்குங்கள்

படைத்தால், காத்தல், அழித்தல் என மூன்றும் செய்வதால் இவருக்கு பைரவர் என அழைக்கப்படுகிறார். பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர், பாவத்தை போக்குவர் என்று பொருள். அனைத்து சிவாலாயங்களிலும் வழிபாடு சூரியனிடமிருந்து ஆரம்பித்து அர்த்தசாமப் பூஜையாக பைரவருடன் முடிவடையும். தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபட்டால் செல்வம் பெருகும், கடன் நீங்கும், தோஷம் நீங்கும் மற்றும் பல நன்மைகள் கிடைக்கும். இதை SHARE செய்யவும்