News April 30, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து காவல்துறை விவரம்

இன்று (ஏப்ரல் 29) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
Similar News
News September 18, 2025
ராம்நாடு: உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க…

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
NPHH: சில பொருட்கள் மட்டும்.. உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய <
News September 18, 2025
பரமக்குடி நான்கு வழிச்சாலையில் பயங்கர விபத்து

பரமக்குடி அருகே உள்ள வேந்தோணி நான்கு வழிச் சாலையில் இன்று (செப். 18) காலையில் மதுரையில் இருந்து வந்த டாடா மினி லாரியும், எதிரே வந்த மினி லாரியும் அங்குள்ள பேக்கரி அருகே மோதி விபத்து ஏற்பட்டது. இதில், மினி லாரி டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்த விபத்தில் அருகே நின்றிருந்த 3 கார்களும் சேதமடைந்தது. இந்த விபத்து குறித்து பரமக்குடி சரக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
News September 18, 2025
ராமநாதபுரம் மக்களே., இத மிஸ் பண்ணிடாதீங்க!

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் நாளை (செப். 19) காலை 10 முதல் 1 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில், 20 தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. 10ம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ , டிப்ளமோ மற்றும் டிகிரி படித்தவர்கள் இம்முகாமில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வேலைதேடும் நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.