News April 22, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (ஏப்ரல் 21) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
Similar News
News July 8, 2025
ரூ.40,000 சம்பளத்தில் வேலை; நாளை மறுநாள் கடைசி நாள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மருத்துவ அதிகாரி, MTS, Data Assistant உள்ளிட்ட 27 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 8th, B.Sc, BBA, BCA, BE/B.Tech, BSMS, BUMS, D.Pharm, Diploma, Nursing படித்தவர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க நாளை மறுநாள் ஜூலை 10, கடைசி நாளாகும். தகுதியானவர்களுக்கு மாதம் ரூ.9,000 முதல் ரூ.40,000 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பம் டவுன்லோடு செய்ய இங்கே <
News July 8, 2025
ராமநாதபுரம் மாவட்ட இரவு காவலர்களின் விவரம்

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை, சார்பில் இன்று (ஜூலை 7) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கமுதி, பரமக்குடி, ராமேஸ்வரம், முதுகுளத்தூர் உட்கோட்டத்தில் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளனர். இரவு நேரங்களில் அவசர தேவைகளுக்கு, பொதுமக்கள் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்கள் மூலம் காவல்துறையை தொடர்புகொண்டு உதவி பெறலாம்.
News July 7, 2025
ராமநாதபுரம்: கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு (1/1)

தமிழ்நாடு வருவாய்த் துறையில் 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில்,ராமநாதபுரத்திற்கு 29 காலிப் பணியிடங்கள் உள்ளது. விண்ணப்பிக்க ஆகஸ்ட் 4 கடைசி நாளாகும். இப்பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், தமிழில் எழுத/படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மாத சம்பளம்: ரூ.11,100 முதல் 35,100 வரை வழங்கப்படும். சைக்கிள்/ டூவீலர் ஒட்டத் தெரிந்தால் கூடுதல் மதிப்பெண். <<16974346>>மேலும் அறிய<<>>