News April 17, 2025

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

image

இன்று (ஏப்ரல். 17) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

Similar News

News July 11, 2025

இராமேஸ்வரம் – விழுப்புரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

image

இராமேஸ்வரம் – விழுப்புரம் ரயில் சேவை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்த நிலையில் விழுப்புரம் – ராமேசுவரம் சிறப்பு ரயில் சேவையானது 27ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக வரும் 12ம் தேதியில் இருந்து 27ம் தேதி வரை 6 முறைக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

News July 11, 2025

இராமநாதபுரம்: ஆசிரியர் வேலை வேண்டுமா?

image

ராமநாதபுரம் மக்களே, தமிழகத்தில் காலியாக உள்ள 1,996 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு ஜூலை 10 (நேற்று) முதல் ஆகஸ்ட்12ம் தேதி வரை <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம். தேர்வானது செப்.28ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் ஆசிரியர் வேலையை எதிர்பார்த்து உள்ளவர்களுக்காக SHARE பண்ணி உதவுங்க…

News July 11, 2025

இராமநாதபுரத்தில் வேலைவாய்ப்பு முகாம்

image

இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (ஜூலை11) காலை 10 மணி – பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் (D பிளாக்) நடைபெறும் இம்முகாமில் 20 முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. 10 முதல் ITI, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் பங்குபெறலாம். வேலைதேடும் நண்பர்களுக்கு உடனே SHARE செய்யுங்கள்.

error: Content is protected !!