News April 2, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (ஏப்ரல்.01) இரவு 11 மணி முதல் நாளை காலை 6 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
Similar News
News November 8, 2025
ராமேஸ்வரம் வந்த இலங்கை நபர் கைது

யாழ்ப்பாணத்திலிருந்து தமிழகத்திற்கு கண்ணன் என்பவர் கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் நாட்டுப்படகில் புறப்பட்டு வேதாரண்யம் கடற்கரையில் இறங்கி அங்கிருந்து பேருந்து மூலமாக ராமேஸ்வரம் வந்து இறங்கிய இலங்கை சேர்ந்த நபர் ஒருவரை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரை பரமக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி வரும் 21ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தவிடப்பட்டுள்ளது.
News November 8, 2025
ராம்நாடு: 10th தகுதி.. ரூ.50,400 வரை சம்பளம்.! APPLY NOW

ராமநாதபுரம் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 32 வயதுகுட்பட்ட 10th முடித்தவர்கள் <
News November 8, 2025
ராம்நாடு: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வழி

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


