News March 25, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் இன்று இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும். *இரவு வேலைக்கு செல்வோருக்கு ஷேர் செய்து உதவுங்கள்*
Similar News
News April 2, 2025
ராமநாதபுரத்தில் வேலை வாய்ப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 20 விற்பனையாளர் காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குஇ 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 40 வயது வரை உள்ள ஆண் பெண் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக 15 ஆயிரம் வழங்கப்படும் . விருப்பம் உள்ளவர்கள் இந்த <
News April 2, 2025
ரயிலில் 20 கிலோ கஞ்சாவுடன் இருவர் சிக்கினர்

சென்னை-ராமேஸ்வரம் விரைவு ரயில் முன்பதிவில்லா பெட்டியில் திருச்சி-மண்டபம் வரை பயணித்த பயணிகளின் உடைமைகளை போலீசார் இன்று அதிகாலை திடீர் சோதனை செய்தனர். இதில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரதேஷ் மொகாந்தி 28, பிரியா பாரத் மொகாந்தி 40 ஆகியோரின் உடைமைகளை பரிசோதித்தனர். அப்பொழுது இருவரிடமும் 19.700 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் இருவரையும் போதைப் பொருள் தடுப்பு போலீசில் ஒப்படைத்தனர்.
News April 2, 2025
சிறுமிக்கு பாலியல் கொடுமை அளித்த தாய் உட்பட 3 பேர் கைது

ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி தனக்கு பாலியல் தொல்லைகள் நடந்ததாக ஆசிரியரிடம் கூறியுள்ளார். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமியின் தாயுடன் பழக்கத்தில் இருந்த நவீன்(21) என்ற கல்லூரி மாணவன் சிறுமியின் தாயின் உடந்தையுடன் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பரத்(19) என்ற மற்றொரு மாணவரும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதில் சிறுமியின் தாய் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.