News March 31, 2025
ராமநாதபுரம்: ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

ராமநாதபுரம் மாவட்டத்தில் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்ச்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும். ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். ரேஷன் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் பகிரவும்.
Similar News
News April 3, 2025
ராமநாதபுரம்: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்

இன்று (ஏப்ரல். 03) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
News April 3, 2025
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் திருஉத்திரகோசமங்கை மங்களநாதர், மங்களநாயகி கும்பாபிஷேக விழா நாளை (ஏப்.04) நடைபெற உள்ளது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஈடுகட்டும் விதமாக மே.10ஆம் தேதி வேலை நாளாக அறிவித்து கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் அறிவித்துள்ளார்.
News April 3, 2025
ஆங்கில தேர்வில் 348 பேர் ஆப்சென்ட்

பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு ஆங்கிலப்பாடத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 348 பேர் ஆப்சென்ட் ஆகினர். மாவட்டத்தில் 82 தேர்வு மையங்களில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மார்ச் 28 ல் துவங்கி ஏப்-15 வரை நடக்கிறது.16 ஆயிரத்து 399 மாணவர்கள், தனித் தேர்வர்களாக 249 பேர் என 16 ஆயிரத்து 648 பேர் தேர்வு எழுதுகின்றனர். நேற்று (ஏப்ரல்-02) நடந்த ஆங்கிலப்பாடத்தேர்வில் 348 பேர் பங்கேற்கவில்லை.