News May 16, 2024

ராமநாதபுரம்: மின்தடை அறிவிப்பு ரத்து

image

கமுதி துணைமின் நிலையத்திற்குட்பட்ட பார்த்திபனூர், அபிராமம், முதுகுளத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் மின் பராமரிப்பு நடைபெறவுள்ளதால் இன்று (மே 16) மின்தடை ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வானிலை திடீர் மாற்றம் காரணமாக மின் தடை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கமுதி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் விஜயன் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 23, 2025

ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் அறிவிப்பு

image

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இன்று (டிச-23) ஒரு விசைப்படகு, 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இலங்கை கடற்படையில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை படகுகளையும் விடுதலை செய்ய கோரி டிச- 26ம் தேதி காலை 10.00 மணி அளவில் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

News December 23, 2025

இராமநாதபுரம்: இலவச நான்கு சக்கர வாகனம் பயிற்சி

image

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து, இராமநாதபுரம் பூ மாலை வணிக வளாகம் புது பஸ்ஸ்டாண்ட் அருகில், வருகின்ற டிச.26ம் தேதி இலவச நான்கு சக்கர வாகனம் ஓட்டுநர் பயிற்சி நடைபெற உள்ளது. இந்த பயிற்சியானது 30 நாட்களுக்கு நடைபெறும். பயிற்சி நேரம்: 9:30 AM – 5.00 PM வரை. மேலும், தகவலுக்கு 9087260074, 8056771986 தொடர்பு கொள்ளவும்.

News December 23, 2025

இராமநாதபுரம்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

இராமநாதபுரம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!