News April 25, 2025
ராமநாதபுரம் மாவட்ட இரவு நேர ரோந்து பணி விவரம்

ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினர் இன்று (ஏப்ரல் 24) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளனர். இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறை அதிகாரிகளின் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் தங்களுக்கு ஏதேனும் அவசர தேவை ஏற்பட்டால் புகைப்படத்தில் இருக்கும் எண்களை தொடர்பு கொண்டு அவர்களை உதவிக்கு அழைக்கலாம்.
Similar News
News November 19, 2025
இராமநாதபுரத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

இராமநாதபுரம் மாவட்ட பழைய ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருகிற நவ.21 காலை 10:30 மணியளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அனைத்துதுறை அரசு அதிகாரிகள் பங்கேற்க இருக்கின்றனர். எனவே விவசாயிகளும் விவசாய சங்க பிரதிநிதிகளும் பங்கேற்று கோரிக்கைகள், குறைகளை தெரிவித்து பயன் பெறலாம் என இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
News November 19, 2025
திரு உத்திரகோசமங்கையில் ஆருத்ரா தரிசனம்

இராமநாதபுரம் மாவட்டம், திரு உத்திரகோசமங்கையில் அருள்பாளித்து கொண்டு இருக்கும் மங்களநாத சுவாமி ஆலயத்தில் எழுந்தருளிய நடராஜருக்கு ஆருத்ரா தரிசனத்திற்கு முன் ஜனவரி 2ம் தேதி(02.01.2026) கலைக்கப்பட்டு மரகத திருமேனியாக கட்சியலிப்பார். அதன்பின் ஜனவரி 3ஆம் தேதி (03.01.2026)அதிகாலையில் சந்தானம் சாத்தப்பட்டு அன்று முழுவதும் கட்சியலிப்பார். *ஷேர் பண்ணுங்க
News November 17, 2025
இராம்நாடு: டிஜிட்டல் ஆதார் APPLY பண்ணுங்க

இராம்நாடு மக்களே; ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா?? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HI-ன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார்-ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும். மற்றவர்களும் இதை தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.


