News May 8, 2025
ராமநாதபுரம் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மே.08) வெப்ப சலனம் காரணமாக மாவட்டத்தின் உள் பகுதிகளில் பிற்பகல் மற்றும் மாலை நேரத்தில் ஒரு சில இடங்களில் குறிப்பாக பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, பார்த்திபனூர், அபிராமம், நயினார் கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என ராமநாதபுரம் காலநிலை அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 11, 2025
காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய டிஐஜி

இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் அலுவலகத்தில் இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கான குற்ற நிகழ்வுகள் குறித்த மாதாந்திர திறனாய்வு கூட்டம் இன்று (நவ.11) நடைபெற்றது. இக்கூட்டத்தில் இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு, காவல்துறை துணைத்தலைவர் முனைவர் பா.மூர்த்தி ஐபிஎஸ் அவர்கள் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.
News November 11, 2025
தாய்லாந்தில் பட்டம் வென்ற இராமநாதபுரம் பெண்

முதுகுளத்தூர் அருகே உள்ள தெற்கு காக்கூர் கிராமத்தைச் சேர்ந்த கஜேந்திர பிரபு அல்லிராணி ஆகியோரின் மகள் ஜோதிமலர்(28). பி.டெக் பட்டதாரியான இவர் கடந்த நவம்பர் 8-ம் தேதி தாய்லாந்தில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் இந்திய சார்பில் போட்டியிட்ட ஜோதிமலர் கலாச்சார தூதர் பட்டம் வென்றார். ஜோதி மலர் சென்னையில் ஐடி கம்பெனியில் வேலை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
News November 11, 2025
ராம்நாடு: டிகிரி போதும்.. வங்கியில் வேலை!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Local Bank Officer (LBO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. காலியிடங்கள்: 750
3. கல்வித் தகுதி: Any Bachelor Degree
4.சம்பளம்.ரூ.48,480 – 85,920/-
5. கடைசி நாள்: 23.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


