News May 15, 2024

ராமநாதபுரம் மழைப்பொழிவு விவரம்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று (மே.14) பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தங்கச்சிமடம் பகுஹ்டியில் 5செ.மீட்டரும், முதுகுளத்தூர், தொண்டி ஆகிய பகுதிகளில் 2 செ.மீட்டரும், ஆர்.எஸ். மங்கலம், கடலாடி ஆகிய பகுதிகளில் 1 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.

Similar News

News December 14, 2025

பரமக்குடியில் புதிய பேருந்து சேவையை துவக்கி வைத்த எம்எல்ஏ

image

பரமக்குடி பேருந்து நிலையத்திலிருந்து காந்திநகர் இளையான்குடி வழியாக சேத்தூர் செல்லும் புதிய பேருந்து சேவையை இன்று பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி, பரமக்குடி கிளை மேலாளர் சிவகார்த்திகேயன், ஒன்றிய செயலாளர்கள் குணசேகரன், ஜெயக்குமார்,பொதுக்குழு உறுப்பினர் அருளானந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

News December 14, 2025

BREAKING இராம்நாடு: குளத்தில் மூழ்கி தாய், மகன் இறப்பு

image

ஆந்திராவை சேர்ந்தவர் பென்சலம்மாள்(38), தனது 2 மகன்களுடன் இராமநாதபுரம். குயவன்குடி முருகன் கோயில் அருகே உள்ள குளத்தில் இன்று மதியம் குளிக்க சென்றார். இவரது மூத்த மகன் நவீன்(12) நீரில் மூழ்கியதை கண்டு பென்சலம்மாள், தண்ணீரில் இறங்கியுள்ளார். நவீனை(12) தேட முயற்சித்த பென்சலம்மாளும் தண்ணீரில் மூழ்கி இறந்து போனார். இருவரது உடல்களையும் கைப்பற்றிய கேணிக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 14, 2025

ராமநாதபுரம்: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

image

ராமநாதபுரம் மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04567-230036) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.

error: Content is protected !!