News March 25, 2025
ராமநாதபுரம் நகராட்சி மாநகராட்சியாக மாற்றம்

இராமநாதபுரம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதாக இன்று(மார்ச்.25) தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என் நேரு இன்று அறிவித்தார். இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 25 ஆக இருக்கும். மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் பகுதிகளுக்கு சொத்துவரி, குடிநீர் வரி உள்ளிட்டவைகள் உயரும் & 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் கருத்து என்ன?
Similar News
News November 16, 2025
ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தடை

2ம் நாளான நேற்றும் ராமேஸ்வரம் பகுதியில் சூறாவளி தொடர்ந்து வீசியதால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனால் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதியில் 1500 விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் நிறுத்தப்பட்டு 2ம் நாளாக மீனவர்கள் வீடுகளில் முடங்கினர். சூறாவளி தொடர்வதால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறையினர் தெரிவித்தனர்.
News November 16, 2025
இராமநாதபுரம் அரசு பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது

2024-25 சிறந்த பள்ளிக்கான கேடயம் வழங்கும் நிகழ்வு காரைக்குடி அழகப்பா மாதிரி பள்ளியில் நடைபெற்றது. துணை முதலமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், பள்ளிக்கல்வி இயக்குனர் தொடக்கக் கல்வி இயக்குனர் கலந்துகொண்டு மாவட்ட வாரியாக கேடயங்களை வழங்கினர். அதில் இராமநாதபுரம் பேராவூர் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கான கேடயத்தை தலைமை ஆசிரியை காளீஸ்வரி பெற்றுக்கொண்டார்.
News November 16, 2025
ராமநாதபுரம்; டெட் தேர்வு மையங்களில் கலெக்டர் ஆய்வு!

இராமநாதபுரம் அருகே உள்ள முகமது சதக் கல்லூரியில் இன்று (15.11.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் டெட் தேர்வு நடைபெறும் மையங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.


