News February 18, 2025

ராமநாதபுரம் செய்தியாளர்கள் சங்கம் கண்டனம்

image

விகடன் குழுமத்திற்கு ஆதரவாக இராமநாதபுரம் செய்தியாளர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்: நூறாண்டுகள் பழமையான விகடன் குழுமத்தின் இணையதளம் முடக்கம் கருத்து சுதந்திரத்திற்கு போடப்பட்ட தடையாக கருதுகிறோம். விளிம்பு நிலையில் உள்ள பொது மக்களுக்கு ஆதரவாக கருத்து சுதந்திரம் காத்து நாட்டின் வளர்ச்சிக்கு நான்காவது தூணாக இருக்கும் பத்திரிகை தர்மத்திற்கு இடையூறாக இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.

Similar News

News November 25, 2025

ராநாதபுரம்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் OFFER

image

ராமநாதபுரம் மக்களே, சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31-க்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News November 25, 2025

ராமநாதபுரம்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

ராமநாதபுரம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 25, 2025

ராமநாதபுரம் அருகே  கடல் அலை சுழலில் சிக்கியவர் மாயம்

image

நம்புதாளையை சேர்ந்தவர் முத்துராக்கு 50. மீனவரான இவருக்கு சொந்தமான நாட்டு பைபர் படகை பாதுகாக்கும் வகையில் நங்கூரம் இட்டு நிறுத்துவதற்காக அதே கிராமத்தை சேர்ந்த பரந்தாமன் 30, ஆகாஷ் 20, தொண்டீஸ்வரன் 18, ஆகிய மூவரும் கடலுக்குள் சென்றனர். அப்போது சிக்கியதால் தொண்டீஸ்வரனை அலை சுழல் இழுத்துச் சென்றது. போலீசார் உள்ளிட்ட பலரும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!