News March 19, 2024
ராமநாதபுரம்: சிறுமிக்கு பாலியல் தொல்லை

இராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவை பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர் (37). இவர் 14 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக சிறுமி அவரது பெற்றோரிடம் நடந்ததை சொல்லியுள்ளார். இதனையடுத்து சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் இராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து சுதாகரை தேடிவருகின்றனர்.
Similar News
News October 24, 2025
இராமேஸ்வரம் மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த அக்.09 அன்று மீன்பிடிக்க சென்ற இராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று அவர்களிடம் விசாரணை நடத்திய மன்னார் நீதிபதி நவம்பர்.06 தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
News October 23, 2025
ராம்நாடு: கரண்ட் பில் தொல்லை; இனி இல்லை

ராம்நாடு மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <
News October 23, 2025
ராம்நாடு: பெற்றோர்கள் கவனத்திற்கு

ராமநாதபுரம் மக்களே, அக்.1 முதல் 5 – 17 வயதுள்ள குழந்தைகளுக்கு ஆதாரில் கை விரல் மற்றும் கண் விழி பதிவு (BIOMETRIC) கட்டாயம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கு கட்டணம் ஏதும் இல்லை; இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். இதை UPDATE செய்தால் தான் பள்ளிகளில் சேர்க்கை, ஸ்காலர்ஷிப் போன்ற அரசு உதவிகளை பெற முடியும் என அறிவுறுத்தியுள்ளது. உடனே UPDATE பண்ணுங்க. இந்த நல்ல தகவலை எல்லாருக்கும் SHARE பண்ணுங்க.