News March 17, 2025
ராமநாதபுரம் காவல்துறை ரோந்து பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(மார்ச்.17) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தனது X வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளது.
Similar News
News March 18, 2025
இராமநாதபுரம் மாவட்டத்தில் ரோந்து காவல் அதிகாரிகள்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (18.03.2025) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் மற்றும் உதவி எண் 100 ஐ டயல் செய்யலாம். என்ற தகவல் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 18, 2025
ராமேஸ்வரம் கோவிலில் பக்தர் உயிரிழப்பு

ராமேஸ்வரம் கோயில் சுவாமி சன்னதியில் ரூ.50 கட்டண தரிசன டிக்கெட் பெற்று ஸ்படிகலிங்க தரிசனத்திற்காக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராஜ்தாஸ் (59) என்பவர் நீண்ட நேரம் காத்திருந்தார். அப்போது அவர் திடீரென மயக்கமுற்று தரையில் சாய்ந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
News March 18, 2025
இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் பலி

கமுதி அருகே செங்கப்படையை சேர்ந்த சிவனேசன்(75) தனது இருசக்கர வாகனத்தில் கமுதிக்கு சென்றுள்ளார். அப்போது பாம்புல்நாயக்கன்பட்டி அருகே சென்ற போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து கமுதி போலீசார் விசாரிக்கின்றனர். இனிமேல் தலைக்கவசம் அணிந்து பாதுகாப்பாக பயணம் செய்வோம். விலைமதிப்பில்லாத உயிரைக் காப்போம்.