News February 16, 2025
ராமநாதபுரம் காவல்துறை ரோந்து பணி விவரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(பிப்.16) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தனது X வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.
Similar News
News November 4, 2025
ராம்நாடு: ஆபரணங்கள் தயாரிக்கும் இலவச பயிற்சி

இராமநாதபுரம் சிகில் ராஜ தெரு, சாந்த் பீபி காம்ப்ளக்ஸ், 2வது தளத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் நடத்தும் “செயற்கை ஆபரணம் தயாரித்தல் இலவச பயற்சி” அளிக்கப்பட உள்ளது. பயிற்சி ஆரம்பிக்கப்படும் நாள் நவ. 14 ஆகும். பயிற்சி நாட்கள் – 14. பயிற்சி நேரம்: 9:30 AM – 5.00 PM . முன்பதிவுக்கு :
9087260074,8056771986. SHARE!
News November 3, 2025
ராம்நாடு: மக்கள் குறை தீர் நாள் கூட்டம்: 317 பேர் மனு

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று (நவ.3) நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். இதில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்கும், குடிநீர் இணைப்பு கோரி 317 பேர் மனு அளித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் புகாரி சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் கிருஷ்ணகுமாரி, மாவட்ட வழங்கல் அலுவலர் மணிமாறன் உடனிருந்தனர்.
News November 3, 2025
ராம்நாடு: மீனவர்கள் கைது.. முதலமைச்சர் கடிதம்

இன்று ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 4 மீனவர்கள் மற்றும் நாகை மீனவர்கள் 31 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். தற்போது வரை, 114 மீனவர்களும், 247 படகுகளும் இலங்கை வசம் உள்ளன. இதனை குறிப்பிட்டு, தொடர் கைது நடவடிக்கைகளை தடுக்கவும், மீனவர்கள் அனைவரும் நாடு திரும்ப உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.


