News June 25, 2024
ராமநாதபுரத்தில் 3 பேர் உயிரிழப்பு

ராமநாதபுரம், வாலிநோக்கம் சேர்ந்த முஹம்மது மாலிக், மனைவி குடும்பத்தாருடன் குற்றாலம் சென்று விட்டு இன்று மாலை வீடு திரும்பியபோது புஞ்செய் எனும் இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் பனை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் மாமியார், இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மாலிக், மனைவி, ஒரு குழந்தை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், சாயல்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News September 18, 2025
ராம்நாடு: உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க…

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
NPHH: சில பொருட்கள் மட்டும்.. உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய <
News September 18, 2025
பரமக்குடி நான்கு வழிச்சாலையில் பயங்கர விபத்து

பரமக்குடி அருகே உள்ள வேந்தோணி நான்கு வழிச் சாலையில் இன்று (செப். 18) காலையில் மதுரையில் இருந்து வந்த டாடா மினி லாரியும், எதிரே வந்த மினி லாரியும் அங்குள்ள பேக்கரி அருகே மோதி விபத்து ஏற்பட்டது. இதில், மினி லாரி டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்த விபத்தில் அருகே நின்றிருந்த 3 கார்களும் சேதமடைந்தது. இந்த விபத்து குறித்து பரமக்குடி சரக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
News September 18, 2025
ராமநாதபுரம் மக்களே., இத மிஸ் பண்ணிடாதீங்க!

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் நாளை (செப். 19) காலை 10 முதல் 1 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில், 20 தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. 10ம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ , டிப்ளமோ மற்றும் டிகிரி படித்தவர்கள் இம்முகாமில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வேலைதேடும் நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.