News April 12, 2025
ராமநாதபுரத்தில் 187 சமையல் உதவியாளர் பணி

ராமநாதபுரத்தில் உள்ள மாவட்ட பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 187 சமையல் உதவியாளர் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. தேர்வான ஓராண்டுக்கு தொகுப்பூதியமும், அதன் பின்பு சிறப்பு காலமுறை ஊதியமும் வழங்கப்படும். 10-ம் வகுப்பு தோல்வி, தேர்ச்சி பெற்ற 18- 40 வயதுள்ளவர்கள் வரும் ஏப். 29க்குள் சம்பந்தப்பட்ட ஒன்றியம், நகராட்சி, அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.*SHARE பண்ணவும்
Similar News
News September 16, 2025
ராமநாதபுரம்: ரூ.35,000 சம்பளத்தில் ரயில்வேயில் சூப்பர் வேலை..!

ரயில்வே துறையில் Station Controller வேலைக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
▶️ காலியிடங்கள்: 368
▶️ வயது வரம்பு: 20 – 33
▶️ கல்வி தகுதி: Any Degree
▶️ பணிகள்: Station Controller
▶️ சம்பளம்: ரூ.35,400
▶️ பணியிடம்: தமிழ்நாடு
▶️ ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 15.09.2025
▶️ ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்: 14.10.2025
விண்ணப்பிக்க <
News September 16, 2025
ராமநாதபுரம்: கடையில் ரூ.25 ஆயிரம் அபராதம்

உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர் சுரேஷ் தலைமையில் ராமநாதபுரம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ், ராமேஸ்வரம் மண்டபம் உணவு பாதுகாப்பு அலுவலர் முருகன் ஆகியோர் இன்று காலை போகலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சத்திரக்குடியில் உள்ள ஒரு கடையில் தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து ரூ25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
News September 16, 2025
பரமக்குடியில் காவு வாங்க காத்திருக்கும் பாலம்

பரமக்குடி அருகே எமனேஸ்வரம் – நயினார்கோவில் சாலையில் வைகை ஆற்றின் மேல் உள்ள தரைப்பாதை பாலத்தில் பில்லர்கள் உடைந்து, தடுப்பு கம்பிகள் காணாமல் போயுள்ளன. தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள், மாணவர்கள் பயணிக்கும் நிலையில் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. பாலத்தை உடனடியாக சீரமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்பாலத்தில் 8 ஆண்டுக்கு முன்பு மாணவி ஒருவர் டிராக்டர் மோதி பலியானார் என்பது குறிப்பிடதக்கது.