News March 21, 2024
ராமநாதபுரத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம்

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனி போட்டியிடுகிறார். இந்நிலையில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நாளை கேணிக்கரையில் உள்ள தனியார் மஹாலில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் நடைபெறுகிறது. இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் அறிவித்துள்ளார்.
Similar News
News April 9, 2025
கடலில் கிடைத்த 12 அடி முருகன் வேல்

தேவிபட்டினம் கடலில் கருடன் வானத்தில் வட்டமிடும், கடலில் எலுமிச்சை பழம் மிதந்து வரும் அந்த இடத்தில் எனது உருவம் உள்ளது என கனவில் முருகன் தெரிவித்ததாக ஒருவர் கூற, அதன்படி மக்கள் சென்று பார்த்தபோது அவ்வாறு நிகழ்ந்துள்ளது. கடலில் 12 அடியில் முருகன் உருவம் பொறித்த வேல் ஒன்று கிடைத்துள்ளது. இது தான் இன்றைய பெருவயல் ரெணபலி முருகன் கோயிலில். இங்கு சென்றால் உடல் காயங்கள் குணமாகும் என்பது நம்பிக்கை *ஷேர்
News April 9, 2025
ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை நண்பகல் ரோந்து அதிகாரிகள் விவரம்

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை நண்பகல் ரோந்து அதிகாரிகள் விபர பட்டியல் மற்றும் அலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம், ராமேஸ்வரம், கமுதி, முதுகுளத்தூர், கடலாடி, கீழக்கரை மற்றும் திருவாடானை பகுதிகளில் இன்று (ஏப்.9) நண்பகல் 2மணி முதல் மாலை 4 மணி வரை ரோந்து அதிகாரிகள் மற்றும் அலைபேசி எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு ஹலோ போலீஸ் எண்கள் 83000 31100 (அ) 100ஐ அணுகவும்.
News April 9, 2025
இராமநாதபுரத்தில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள்

சித்திரை கார் என்றழைக்கப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். ராமநாதபுரம், திருப்புல்லாணியில் ஏக்கருக்கு சுமார் 1000கி வரையில் மகசூல் கொடுப்பதாக கருதப்படுகிறது.
இராமநாதபுரம் குண்டு மிளகாய் என்பது இராமநாதபுரம் மாவட்டத்தில் முதன்மையாக திருவாடானை, முதுகுளத்தூர், கடலாடி, இராஜசிங்கமங்கலம், கமுதி வட்டங்களில் விளைகிறது. *ஷேர் பண்ணுங்க