News August 26, 2024
ராமநாதபுரத்தில் மாபெரும் கபடி போட்டி

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கொட்டகை கிராமத்தில் மாபெரும் கபடி போட்டி நேற்று(ஆக.,25) நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் வீரர்கள் பங்குபெற்றனர். 2 நாளாக நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்ற அணியினருக்கு விளையாட்டு குழு சார்பாக ரூ.15,000 பரிசு தொகை மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட்டது. இதில் சிறந்த ஆட்டநாயகன் விருதை, களரியை சேர்ந்த மணிமாறனுக்கு வழங்கப்பட்டது.
Similar News
News November 10, 2025
ராம்நாடு: 11 மீனவர்கள் மீது வழக்கு

தொண்டி கடல் பகுதியில் கரைவலை முறையில் மீன் பிடித்த 11 மீனவர்கள் மீது மீன்வளத் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சோழியக்குடி பகுதியைச் சேர்ந்த 10 மீனவர்கள், விலாஞ்சியடியைச் சேர்ந்த 1 மீனவர் உட்பட 11 மீனவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வெடி வைத்து மீன் பிடிப்பது, அதிக ஒளி பாய்ச்சி மீன் பிடிப்பது, கரை வலை இழுவை முறையில் மீன் பிடிப்பது ஆகியவற்றுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
News November 10, 2025
ராம்நாடு: ஓடும் பேருந்தில் நடத்துனருக்கு மாரடைப்பு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நேற்று கரூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ராமேஸ்வரம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் நடத்துனராக பணியில் இருந்தார். இந்நிலையில் பேருந்து பார்த்திபனூர் அருகே வந்த போது ராஜேந்திரனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு ஓடும் பேருந்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
News November 10, 2025
ராம்நாடு: போலீஸ் எழுத்துத் தேர்வு: 714 பேர் ஆப்சென்ட்

தமிழ்நாடு முழுவதும் 2ம் நிலைக் காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நேற்று காலை நடந்தது. ராமநாதபுரம் 4, பரமக்குடி, கீழக்கரை தலா 1 என 6 மையங்களில் தேர்வு நடந்தது. 1,344 பெண்கள் உள்பட 6,522 விண்ணப்பித்தனர். இன்று நடந்த தேர்வில் 1,178 பெண்கள் உள்பட 5,808 பங்கேற்றனர். 168 பெண்கள் உள்பட 714 பேர் பங்கேற்கவில்லை. இத்தேர்வு மையங்களை எஸ்பி சந்தீஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


