News August 25, 2024
ராமநாதபுரத்தில் பேச்சுப் போட்டி – அழைப்பு

ராமநாதபுரத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக இளைஞரணி சார்பில் வரும் (ஆக.29) பாரதி நகர் பீமாஸ் மஹாலில் ‘என் உயிரினும் மேலான..’ என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்பவர்கள் (ஆக.29) காலை 8 மணிக்குள் முன்பதிவு செய்து மாணவ மாணவியர் கலந்து கொள்ளுமாறு திமுக மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 7, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (டிச.06) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
News December 6, 2025
இராமநாதபுரம் கிராமத்திற்கு ரூ.1 கோடி பரிசு

சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையினையும் கடைபிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில், தகுதி படைத்த 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி ஊக்கத்தொகையுடன் கூடிய, சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதுகள் வழங்கப்படும். அந்த வகையில் இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி வட்டாரத்தில் அமைந்துள்ள மேலமடை ஊராட்சி சமூக நல்லிணக்கத்திற்கான விருதிற்கு தேர்வு செய்ய்யப்பட்டுள்ளது.
News December 6, 2025
ராமநாதபுரம் மாவட்ட நண்பகல் காவல் ரோந்து அதிகாரிகள்

இன்று மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை ராமநாதபுரம் மாவட்ட காவல் பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் தொடர்பு எண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கீழக்கரை, ராமேஸ்வரம், ராமநாதபுரம், திருவாடானை, முதுகுளத்தூர், கமுதி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தேவைக்கு இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் சந்தீஷ் தெரிவித்துள்ளார்.


