News August 7, 2024
ராமநாதபுரத்தில் தலைமை மருத்துவர் பணியிடமாற்றம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று காலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட தலைமை மருத்துவமனையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் இருந்ததால் கோபமடைந்த அமைச்சர் ஜெயலலிதா தான் உங்கள் முதலமைச்சரா என கேள்வி எழுப்பி, தலைமை மருத்துவர் முத்தரசனை பணியிடமாற்றத்துக்கு உத்தரவிட்டார்.
Similar News
News February 11, 2026
ரூ.1853 கோடியில் பரமக்குடி – இராமநாதபுரம் 4 வழிச்சாலை

மதுரை – பரமக்குடி நான்கு வழிச்சாலை கடந்த 2015ல் ரூ.934 கோடியில் துவங்கி 2018 முதல் அமலுக்கு வந்தது. தொடர்ந்து பரமக்குடியில் இருந்து இராமநாதபுரம் வரை 46.7 கீ.மீ தூரம் நான்கு வழிச்சாலை யாக மாற்ற திட்டம் வகுக்கப்பட்டு நில எடுப்பு பணிகள் நிறைவடைந்து, ரூ.1853 கோடி மதிப்பீட்டில் இத்திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் தற்போது அரியனேந்தல் பகுதியில் பணிகள் துவங்கியதுள்ளன.
News February 11, 2026
பரமக்குடியில் விபத்து; சம்பவ இடத்திலேயே பலி!

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, முத்துசெல்லாபுரம், நான்கு வழிச்சாலை அருகே கார் – பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பைக்கில் சென்ற முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். அவரிடம் இருந்த ஆதார் கார்டின் அடிப்படையில் இறந்தவர் ஆறுமுகம் கந்தன், எனவும் ஊர் உறையூர் என தெரியவந்துள்ளது.
News February 11, 2026
இராம்நாடு: சொந்த வீடு கட்ட சூப்பர் திட்டம்

உங்கள் சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சூப்பர் திட்டமாக உள்ளது பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டம். இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.2.30 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. சொந்த வீடு இல்லாதவர்கள் இந்த <


