News April 16, 2024
ராமநாதபுரத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் மழை

ராமநாதபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சில இடங்களில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 23, 2025
ராமநாதபுரம்: ஊருக்கு வரும்போது முதியவருக்கு நேர்ந்த சோகம்

தேவிபட்டினம் எருமைப்பட்டி ஹரிதாஸ் 65.இவர் நேற்று முன்தினம் மாலை டூவீலரில் தேவிபட்டினத்தில் இருந்து சொந்த ஊர் திரும்பினார். எருமைப்பட்டி விலக்கு அருகே கார் மோதியதில் ஹரிதாஸ் காயமடைந்தார். ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று ஹரிதாஸ் பலியானார். திருச்சி ஸ்ரீரங்கம் கீழவாசல் கார் டிரைவர் சரவணன் 50, மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News October 23, 2025
ராமநாதபுரம்: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

ராமநாதபுரம் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இங்கே <
News October 23, 2025
கீழக்கரை: சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

கீழக்கரை ஆடறுத்தான் தெருவில் உள்ள வீட்டில் மராமத்து பணியில் ஈடுபட்ட பொழுது ஏர்வாடியை சேர்ந்த ரவி (46) என்பவர் வேலை செய்து கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து விழுந்து. இதையடுத்து அவரை மீட்டு தீயணைப்பு துறையினர் கீழக்கரை அரசு மருத்துவமனையில் இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.