News March 4, 2025

ராமநாதபுரத்தின் குஷி கடற்கரை

image

இராமநாதசுவாமி கோவிலில் இருந்து சுமார் 27 கி.மீ தொலைவில் உள்ளது இந்த அரியமான் கடற்கரை (எ) குஷி கடற்கரை. 150 மீ அகலமும், 2 கி.மீ நீளமும் உடைய அரியமான் கடற்கரையில் குறைந்த உயரத்தில் அலைகள் எழும்புவதால், பலரும் விரும்பி குளிக்கின்றனர். மேலும் இந்த கடற்கரையின் சிறப்பே இந்த கடற்கரையில் நீர் தெளிவாக இருக்கும் என்பது தான். இராமநாதபுரத்தின் சிறப்பான இடங்கள் குறித்து நீங்களும் எழுதி அனுப்பலாம். *ஷேர்

Similar News

News September 14, 2025

ராமநாதசுவாமி கோவிலில் நவராத்திரி விழா விவரம்

image

ராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோவிலில் நவராத்திரி விழா வரும் செப்.21ம் தேதி துவங்குகிறது. அன்று பர்வதவர்த்தினி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நடைபெறும். 11 நாட்கள் பல்வேறு அலங்காரங்களில் அம்மன் வழிபாடு நடைபெறும். முத்தங்கி சேவை, அன்னபூரணி, மகாலட்சுமி, சரஸ்வதி, கஜலட்சுமி, மகிஷாசுரமர்த்தினி உள்ளிட்ட அலங்காரங்கள் சிறப்பு. விஜயதசமி நாளில் அம்மன் புறப்பாடு, அம்பு எய்துதல், அசுரன் வதம் நடைபெறும். *ஷேர்

News September 14, 2025

ராமநாதபுரம் பொதுக்கூட்டத்தில் செல்வபெருந்தகை !

image

ராமநாதபுரம் அரண்மனை முன்பு நேற்று அகில இந்திய மீனவர் காங்கிரஸ் சார்பில் வாக்குத்திருட்டு குறித்து விளக்க பொதுக்கூட்டம் அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் பெர்ணாண்டோ தலைமையில் நடந்தது. இதில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை பேசினார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்பட பலர் பங்கேற்றனர். ராஜாராம் பாண்டியன், தெய்வேந்திரன், செல்லத்துரை அப்துல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

News September 14, 2025

பாஜக மாநில மீனவர் பிரிவு செயலாளராக ராமநாதன்

image

இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராமநாதன் என்பவர் பாஜக மாநில மீனவர் பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக மாநில மீனவர் பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ராமநாதன் என்பவருக்கு பாஜக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த அறிவிப்பை பாஜக மாநில மீனவர் பிரிவு அமைப்பாளர் சீமா இன்று (செப்.13) அறிவித்துள்ளார்.

error: Content is protected !!