News May 4, 2024

ராணுவ வீரருக்கு ஆளுநர் அஞ்சலி

image

புதுவை துணைநிலை ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இன்று  அறிக்கையில், நாட்டின் எல்லையைப் பாதுகாக்கும் பணியில் தனது உயிரை இழந்த ராணுவ வீரருக்கு எனது சார்பாகவும் புதுச்சேரி மக்கள் சார்பாகவும், வீரவணக்கமும் அஞ்சலியும் செலுத்துகிறேன். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறப்பட்டுள்ளது.

Similar News

News December 9, 2025

புதுச்சேரியில் சிவில் சர்வீஸ் அதிகாரிகள் இடமாற்றம்

image

புதுச்சேரி, துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் போக்குவரத்து ஆணையா் சிவக்குமாா், பள்ளிக் கல்வி இயக்குநா் மற்றும் உயா்கல்வித் துறை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளாா். துணைநிலை ஆளுநரின் நோ்முக செயலரான மாணிக்கதீபன் மாவட்ட பதிவாளா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநராக மாற்றப்பட்டுள்ளாா். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News December 9, 2025

புதுச்சேரி: பேருந்துகளில் திருடிய பெண் கைது

image

கோரிமேடு சிறப்பு நிலை உதவி ஆய்வாளர் ராஜீ தலைமையில், வடக்கு குற்றப்பிரிவு காவலர்கள் மற்றும் தன்வந்திரி காவல் நிலைய குற்றப்பிரிவு காவலர்கள் அடங்கிய தனிப்படை போலீசார் நீண்ட தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இதில் பேருந்துகளில் திருடிய தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சேர்ந்த சின்னத்தாய் என்ற பெண்னை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.3.5 லட்சம் பணம் மற்றும் சுமார் 6 பவுன் தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

News December 9, 2025

புதுச்சேரி: ஆரோவில் திருவிழா அறிவிப்பு

image

அரோவில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் சர்வதேச அரோவில் இலக்கிய விழா (Auroville Literature Festival) வரும் டிசம்பர் 15 முதல், 21 வரை ஒரு வார காலத்திற்கு மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதற்கு நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள், தொழிலதிபர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி நிரல் இறுதி செய்யப்பட்டது.

error: Content is protected !!