News March 19, 2024
ராணுவ கல்லூரியில் சேர்ந்து பயில வாய்ப்பு

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் எடுத்துள்ள செய்தி குறிப்பு: டேராடூனில் உள்ள இந்திய ராணுவ கல்லூரியில் 7ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் 7ஆம் வகுப்பில் பயின்று வரும் மாணவர்கள் 8வது வகுப்பில் சேர்ந்து பயில ஜனவரி 2025 பருவத்திற்கான தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு ராஷ்ட்ரிய ராணுவ கல்லூரியின் www.rimc.gov.in என்ற இணையதளத்தை பார்வையிட்டு பயனடையலாம்.
Similar News
News November 19, 2025
நெல்லை: இனி சாலையில் மாடுகள் திரிந்தால் ரூ.10000 அபராதம்!

திருநெல்வேலி மாநகர பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக கால்நடைகளை சாலைகளில் சுற்றி திரிய விடும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ராணா நேற்று கூறினார். சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித் திரியும் கால்நடைகளை இனி வரும் காலங்களில் கைப்பற்றும் பட்சத்தில், மாடுகளுக்கு முதல் முறை ரூ.5000, இரண்டாவது முறை ரூ.10000 வசூலிக்கப்படும் என்று தெரிவித்தார்.
News November 19, 2025
நெல்லையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நவ.21 அன்று காலை 10:30 மணிக்கு சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் தங்களது கல்வி சான்று மற்றும் இதர சான்றிதழுடன் பங்கேற்று பயனடையலாம். இம்முகாமில் பணி நியமனம் பெறும் பதிவுதாரர்களுடைய வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படாது என வேலை வாய்ப்பு துறை உதவி இயக்குனர் மரிய ஆண்டனி தெரிவித்துள்ளார்.
News November 19, 2025
நெல்லையில் காட்டு யானை வழுக்கி விழுந்து உயிரிழப்பு

மாஞ்சோலை அருகே கோதையாறு வனப்பகுதியில் அரிகொம்பன், புல்லட் ராதாகிருஷ்ணன் ஆகிய மூன்று காட்டு யானைகள் வேறு பகுதியில் இருந்து இங்கு கொண்டு வந்து விடப்பட்டன. இந்நிலையில் நேற்று திடீரென ஒரு காட்டு யானை பள்ளத்தில் வழுக்கி விழுந்து உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியானது. மேலும் ராதாகிருஷ்ணன் யானை தான் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


