News April 16, 2025
ராணுவத்தில் சேர விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

சிவகங்கை மாவட்ட இளைஞர்கள் 2025-ம் ஆண்டுக்கான இந்திய ராணுவ அக்னிவீர் ஆட்சேர்ப்புக்கு ஏப்.10 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் ஏப்.25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <
Similar News
News December 18, 2025
சிவகங்கை: சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

இளையான்குடி வட்டத்தில், வட்டாட்சியர் ரத்தினவேல்பாண்டியன் தலைமையிலான அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் கடந்த 2 நாட்களாக சமுதாயத் தலைவர்கள் புகைப்பட பலகைகள், சிமெண்ட் பீடங்களை அகற்றினர். நேற்று குமாரக்குறிச்சியில் பீடத்தை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பரமக்குடி – இளையான்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சிவகங்கை டிஎஸ்பி அமலஅட்வின் சமரசத்தை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
News December 18, 2025
காரைக்குடி: பூட்டை உடைத்து நகை திருட்டு.. தொழிலாளி கைது

காரைக்குடி அருகே கோட்டையூர் அருணாசலம் செட்டியார் வீதியைச் சேர்ந்தவர் தினகரன். இவருக்கு சொந்தமான தோட்டம் மணச்சை பகுதியில் உள்ளது. இங்கு காரைக்குடி நெசவாளர் காலனியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் வேலை பார்த்து, 5 மாதங்களுக்கு முன்பு பணியிலிருந்து நின்று விட்டார். இந்நிலையில் தினகரன் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவன் நகையை ரவிச்சந்திரன் திருடிய நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர்.
News December 18, 2025
சிவகங்கை: தந்தை மூளைச்சாவு.. குடும்பத்தார் நெகிழ்ச்சி செயல்

சிங்கம்புணரி அருகே ஏரியூரைச் சேர்ந்த கட்டட பொறியாளர் எஸ்.குமரப்பன் (55) மூளைச்சாவு அடைந்தார். இதனைத் தொடர்ந்து, அவரது மகன்கள் தந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்தனர். மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் டிச.16ல் மூளைச்சாவு அடைந்தார். குடும்பத்தினர் சம்மதத்துடன் குமரப்பனின் கல்லீரல், சிறுநீரகங்கள் அறுவை சிகிச்சை மூலம் எடுத்து தேவைப்படுபவர்களுக்கு பொருத்தப்பட்டது.


