News April 16, 2025
ராணுவத்தில் சேர விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

கன்னியாகுமரி மாவட்ட இளைஞர்கள் 2025-ம் ஆண்டுக்கான இந்திய ராணுவ அக்னிவீர் ஆட்சேர்ப்புக்கு ஏப்.10 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் ஏப்.25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <
Similar News
News December 1, 2025
நாகர்கோவிலில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

நாகர்கோவில், பள்ளவிளை கங்கானகரையை சேர்ந்த லிவினா வேலை தேடி வந்தார். நேற்று அவரது லிவினா வீட்டின் அறைக்குள் சென்றவர் வெகு நேரமாகியும் வரவில்லை.அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, லிவினா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.அவரது செல்போனை போலீசார் கைப்பற்றி விசாரணை.
News December 1, 2025
குமரியில் 9 புதிய இன்ஸ்பெக்டர்கள் நியமனம்

குமரி மாவட்டத்திற்கு 9 எஸ்.ஐ.க்கள் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று நியமிக்கப்பட்டுள்ளனர். தென்காசி மாடசாமி புதுக்கடை இன்ஸ்பெக்டராகவும், மதுரை கருப்பசாமி தக்கலை இன்ஸ்பெக்டராகவும், நெல்லை தமிழரசன் மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டராகவும், தென்காசி மாடன் ராம்குமார் திருவட்டார் இன்ஸ்பெக்டராகவும் பதவி உயர்வுடன் நியமிக்கப்பட்டுள்ளனர். நெல்லை வேலம்மாள் வடசேரி இன்ஸ்பெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
News November 30, 2025
சுசீந்திரம் கால பைரவர் கோவிலில் ராகு கால பூஜை

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் திருவாவடுதுறை ஆதீனம் மடம் ஶ்ரீகாலபைரவர் திருத்தலத்தில் இன்று(நவ.30) ஞாயிறு இராகு கால பூஜையை முன்னிட்டு ஸ்ரீ கால பைரவருக்கு பால், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் நடைப்பெற்றது. பின்னர் அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கால பைரவரை தரிசனம் செய்தனர்.


