News March 25, 2025
ராணிப்பேட்டை : வேலைவாய்ப்பு முகாம் ஆட்சியர் தகவல்

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் மார்ச் 28ஆம் தேதி அன்று தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பல முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. எட்டாம் வகுப்பு முதல் ஐடிஐ, நர்சிங் படித்தவர்கள் கலந்து கொள்ளலாம் என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News July 8, 2025
காலம் கடந்து நிற்கும் திருவலம் இரும்பு பாலம்

ராணிப்பேட்டை அருகே திருவலத்தின் முக்கிய அடையாளமாக ராஜேந்திரா பாலம் உள்ளது. ஆங்கிலேயர்கள் அப்போதே பெண்ணையாற்றின் நீரோட்டத்தை கணித்து , துருப்பிடிக்காத வகையில் பாலத்தை கட்டியுள்ளனர். வித்தியாசமாகவும் ராஜேந்திரா பாலம் திகழ்ந்ததால், இங்கு பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. எம்.ஜி.ஆர் தொடங்கி தனுஷ் வரை பல முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் எடுக்கப்பட்ட இந்த பாலம் வரலாற்று சின்னமாக உள்ளது. ஷேர் பண்ணுங்க
News July 8, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( ஜூலை 07)இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100
News July 7, 2025
வெற்றி அழைப்புகள் குறித்து எச்சரிக்கை

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையினர் இன்று (ஜூலை-7) வெளியிட்டுள்ள எச்சரிக்கையின்படி, லாட்டரி மற்றும் வெற்றி அழைப்புகள் (Prize Winning Call) போன்றவற்றை உண்மை என நம்பி பணம் கொடுக்கும் மக்கள் மோசடிக்கு ஆளாகக்கூடும். இந்த வகை கைபேசி அழைப்புகள் மூலம் பணம் வற்புறுத்தும் மோசடி அதிகரித்து வருவதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், சைபர் மோசடியில் சிக்காதீர்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.