News September 12, 2024
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில், SBI வங்கியின் பெயரில் போலியாக Reward Point-களை அனுப்பி இன்றுடன் காலாவதியாகிவிடும் என்றும், Link-யை அனுப்பி Point-களை வெல்லுங்கள் என போலியாக வரும் குறுஞ்செய்திகளை நம்பி பொதுமக்கள் தங்களது விவரங்களை உள்ளீடு செய்யும் போது தங்களது வங்கிக் கணக்கிலுள்ள பணம் மற்றும் முழுவிவரங்கள் திருடப்பட வாய்ப்புள்ளது என எச்சரித்துள்ளது.
Similar News
News November 18, 2025
ராணிப்பேட்டை: விபத்தில் துடிதுடித்து பலி!

ராணிப்பேட்டை: பாப்பாக்கம் அடுத்த நெடும்புலி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன்(60). விவசாய கூலித் தொழிலாளியான இவரது நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன்(67). இருவரும் நேற்று(நவ.17) மாலை ஓச்சேரி செல்வதற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அதே வழியாக வந்த கல்லூரி பஸ் மோதியதில், கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

ராணிப்பேட்டை: இரவு ரோந்து ஈடுபடும் காவலர் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையால் இன்று (நவ.17) இரவு பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் சிறப்பு ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய சாலைகள் மற்றும் பகுதிகளில் பொறுப்பான காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர நிலைகளுக்காக கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியிடப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.