News April 24, 2025
ராணிப்பேட்டை மாவட்டத்தில் குத்துச்சண்டை பயிற்சி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் SDAT அகாடமி மாவட்ட விளையாட்டு குத்துச்சண்டை பயிற்சி மையம் துவங்கப்பட உள்ளது. குத்துச்சண்டை விளையாட்டில் ஆர்வமுடைய 12-21 வயதுடையோர், விளையாட்டு விதிமுறைகள் மூலமாக 40 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தேர்வு 28ம் தேதியன்று காலை 7மணி அளவில் வன்னிவேடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. விரும்புவோர் இதில், கலந்துகொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 15, 2025
ராணிப்பேட்டை: ரிசர்வ் வங்கியில் ரூ.1லட்சம் வரை சம்பளம்!

இந்தியாவின் வங்கிகளில் தலைமையாக ரிசர்வ் வங்கி செயல்படுகிறது. இங்கு பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பட இருக்கிறது. அதிகாரி (DR) General அதிகாரி போன்ற பல்வேறு பிரிவுகளில் விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு டிகிரி முடித்து 21 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். இந்த பணிக்கு மாதம் 55,000 முதல் 1,00,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் செப்-30குள் <
News September 15, 2025
ராணிப்பேட்டை: குண்டர் சட்டத்தில் இருவர் கைது

ராணிப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ராஜீவ் காந்தி மற்றும் அஜய் ஆகிய இருவர் நேற்று (14.9.2025) கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை ஓராண்டு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் ஆட்சியர் சந்திரகலா உத்தரவு பிறப்பித்தார்.
News September 15, 2025
ராணிப்பேட்டை: கனமழை எச்சரிக்கை!

தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் செப்.,17ம் தேதி கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையோடு இருக்கவும், மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!